என் மலர்
நீங்கள் தேடியது "Madurai youth cheating"
மதுரை வாலிபரிடம் ரூ. 4 லட்சம் நிலமோசடி செய்த 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை:
மதுரை நெல்பேட்டை கீழவெளி வீதியைச் சேர்ந்தவர் முகம்மது அப்பாஸ் (வயது 39). இவர் பேரையூர் அப்பாஸ் நகரைச் சேர்ந்த இப்ராகிம் ஷா என்பவரிடம் ரூ.4 லட்சம் கொடுத்து வீட்டுமனை வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் இப்ராகிம்ஷாவின் மகன் ஷாகுல் ஹமீது (30), அதே நிலத்தை ராஜபாளையம் கந்தசாமி, விருதுநகர் நாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து வேறொருவருக்கு விற்றாராம்.இதற்கு முன்னாள் சார்பதிவாளர் சசிகலா, ரமேஷ்பாபு ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இது தொடர்பாக முகம்மது அப்பாஸ் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கண்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






