என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lost chain recovery"

    • வேறொரு வழக்கில் கிடைத்த செயினை அடையாளம் காணப்பட்டது
    • பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தவறவிட்டார்

    நெமிலி:

    காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் வசித்துவரும் செந்தில்குமார் என்பவரின் மனைவி கல்பனா (வயது 37).

    இவர் கடந்த மாதம் 15-ந்தேதி தேதி தனது கணவருடன் பைக்கில் ஆற்காட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    ஒச்சேரி மக்லின் கால்வாய் அருகே தான் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க செயினை தவறவிட்டார்.

    இது தொடர்பாக அவளூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று வேறொரு வழக்கில் கிடைத்த தங்க செயினை அடையாளம் கண்டத்தில் இது கல்பனாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவளூர் போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் அருள்மொழி தங்க செயினை கல்பனாவிடம் ஒப்படைத்தார்.

    ×