என் மலர்
நீங்கள் தேடியது "London court orders seizure"
வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரிட்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #VijayMallya
லண்டன்:
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில், பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், மல்லையா தற்போது தங்கியுள்ள பங்களா உள்பட அனைத்து சொத்துக்களிலும் பிரிட்டன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியும். முன்னதாக, கடந்த மே மாதம் மல்லையாவுக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.






