search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Local Products"

    • தெற்கு ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 94 ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது.
    • 7.64 கோடி ரூபாய் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    திருப்பூர்

    உள்ளூர்களில் தயாரிக்க ப்படும் பொருட்களை பிரபலப்படுத்தவும் பயணிகள் வாங்கவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் 'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' எனும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.முதல் கட்டமாக இத்திட்டம் தெற்கு ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட 94 ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது. 2022-23 நிதியாண்டில் மட்டும் உள்ளூர் கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக 7.64 கோடி ரூபாய் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து சென்னை கோட்டத்தில் உள்ள ௧௩௩ ரெயில்வே நிலையங்கள், மதுரை- 95, திருச்சி- 93, சேலம்- 41, திருவனந்தபுரம்- 65, பாலக்காடு- 56 என 483 ெரயில்வே நிலையங்களில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

    ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் இணைய தெற்கு ரெயில்வே அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் உற்பத்திப் பொருட்கள், கைத்தறி, ஜவுளிகள், பழங்குடியினர் உற்பத்திகள் மற்றும் வீட்டுத் தயாரிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், ராணிப்பேட்டை தோல் தயாரிப்புகள், திருபுவனம் புடவைகள், தஞ்சாவூர் ஓவியங்களும் விற்பனை செய்யப்படுகி ன்றன. 

    ×