என் மலர்

  நீங்கள் தேடியது "Loadge Owner Murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போடியில் இன்று பட்டப்பகலில் லாட்ஜ் உரிமையாளர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலசொக்கநாதபுரம்:

  தேனி மாவட்டம் போடி டவுன் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(55). இவர் அப்பகுதியில் லாட்ஜ் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். இவரது மகன் போடியில் தனியார் கிளினிக் நடத்தி வருகிறார். இன்று பகல் 11 மணியளவில் ராதாகிருஷ்ணன் கடைவீதியில் பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

  அப்போது கேரள எண் பதிவு கொண்ட ஜீப்பில் 3 பேர் வந்து அவரை வழிமறித்துள்ளனர். திடீரென அதில் ஒருவர் ராதாகிருஷ்ணனை அரிவாளால் வெட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பிஓட முயன்றார். இருந்தபோதும் அவருடன் வந்த மற்றவர்களும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

  இதைபார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போடி டி.எஸ்.பி சுரேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். ராதாகிருஷ்ணன் ராணுவத்திற்கு ஆள்அனுப்பும் பணியில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இவர் தி.மு.க பிரமுகராகவும் இருந்து வருகிறார். எனவே முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  போடியில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ×