என் மலர்
நீங்கள் தேடியது "Liquor bottle seller arrested"
- கூடுதல் விலைக்கு ஒருவர் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- புதுக்கோட்டையில் இருந்து வந்த 25 வயதான அன்பழகன் என்பது தெரிய வந்தது
கோத்தகிரி,
கோத்தகிரி கூக்கல் தொரை பகுதியில் கூடுதல் விலைக்கு ஒருவர் மது விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது கூக்கள்தொரை மதுபானக்கடையின் அருகில் இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தார். போலீசார் அந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அந்த இளைஞர் கோத்தகிரி பகுதிக்கு வேலைக்காக புதுக்கோட்டையில் இருந்து வந்த 25 வயதான அன்பழகன் என்பது தெரிய வந்தது அந்த இளைஞர் கூக்கள்தொரை மதுபானக்கடையில் மது பாட்டில்களை வாங்கி அருகில் உள்ள ஊர்களுக்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






