என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Linking of Aadhaar number with e-card"

    • மின் வாரிய அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது
    • டிசம்பர் 31-ந் தேதி வரை இணைக்கலாம் என அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

    இதன்படி, மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது.

    மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி தொடங்கியது.

    இதற்காக சிறப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படவில்லை. அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் இதற்கான தனி கவுண்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ‌ பொதுமக்கள் தாங்கள் ஏற்கனவே மின்கட்டணம் செலுத்தி வரும் மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக சென்று ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை இணைத்துக் கொள்ளலாம்.

    இதற்கு கண்டிப்பாக ஆதார் அட்டை உடன் எடுத்து வர வேண்டும். வருகிற 31.12.22-ந் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×