search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "link Aadhaar number with voter list"

    • ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி.யில் சமர்ப்பிக்கலாம்.
    • வாக்காளர் அடையா அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடந்து வருகின்றன.

    கோவை:

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும், தங்களுடைய ஆதார் அட்டை குறித்த விவரங்களை வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 6பி.யில் சமர்ப்பிக்கலாம்.

    வாக்காளர் அடையா அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதல் நடந்து வருகின்றன. வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் voter helpline செயலி மூலமும், ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களிலும் படிவம் 6பி.யில் பதிவு செய்யலாம்.

    இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் வீடு-வீடாக சென்று வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி இன்று (15-ந் தேதி) மற்றும் நாளை 16-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தோ்தல் ஆணையம், வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணியினை கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கியது.கோவை மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை 10 லட்சத்து 93 ஆயிரத்து 980 போ் (36.23 சதவீதம்) போ் மட்டுமே இணைத்துள்ளனா்.

    எனவே, இந்த பணியினை விரைவுபடுத்தும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று ஆதாா் விவரங்கள் சேகரிக்கும் பணி இன்று மற்றும் நாளை நடத்தப்பட உள்ளது.

    வாக்காளா்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் தங்களது ஆதாா் விவரங்களை அளித்து வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×