search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lightning struck"

    சாத்தூர் அருகே மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே உள்ள வன்னிமடையை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 69). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான பசு மாடுகளை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு வீட்டிற்கு வந்து விட்டது. ஆனால் கன்றுக்குட்டி மற்றும் வேலுசாமி வீட்டிற்கு வரவில்லை.

    உடனே வேலுசாமியின் குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர். அப்போது வன்னிமடையில் இருந்து நென்மேனி செல்லும் சாலை ஓரத்தில் மின்னல் தாக்கி உடல் கருகிய நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார். அவரின் அருகில் கன்றுக்குட்டியும் இறந்து கிடந்துள்ளது.

    இதுகுறித்து இருக்கன்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாடு மேய்க்க சென்ற விவசாயி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    புளியங்குடி அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புளியங்குடி:

    புளியங்குடி அருகே உள்ள அய்யாபுரம் கிராமம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 43). இவரது தாய் கிருஷ்ணம்மாள் (64). இவர் நேற்று மாலை அய்யாபுரம் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் முதலே புளியங்குடி சுற்றுவட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து விளைநிலத்தில் இருந்த கிருஷ்ணம்மாள் மீது மின்னல் தாக்கியது.

    இதில் அவர் முகம் கருகிய நிலையில் கீழே சாய்ந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×