search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LIFT BAN"

    • கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தப்பட்டது
    • அரசு, அரசியல் கட்சிக்கு சவாலாக அசுவமேத யாகம் நடைபெறும்.

    கரூர்:

    கரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பீகாரில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மது, இறக்குமதி மது, சாராயம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டு, கள்ளுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பீகாரை பின்பற்றி மதுவிலக்கு மற்றும் மது கொள்கையினை மாற்றி அமைக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் விரைவில் கள்ளுக்கான தடையை நீக்கி அறிவிக்கவேண்டும். வரும் 15-ந் தேதிக்குள்கள் தடை நீக்க அறிவிப்பு வெளிவரவேண்டும். இல்லை என்றால் 16-ந் தேதி சென்னையில் அரசு, அரசியல் கட்சிக்கு சவாலாக அசுவமேத யாகம் நடைபெறும்.

    விவசாயிகளிடம் ஆறில் ஒரு பங்கு வாங்கி தான் பிரிட்டிஷார் ஆட்சி நடத்தி வந்தனர். இன்றைக்கு அரசு ரூ.6,000 வழங்கி விவசாயிகளை பிச்சைகாரர்களாக கையேந்த வைத்துள்ளது. அரசியல் கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்கும், பிடித்த ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை வழங்கி வருகிறது. இதனால் ஊழல், ஒழுங்கீனம், முறைகேடுதான் பெருகும் என்றார்.  

    ×