search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lee Chong Wei"

    மலேசியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரருமான லீ சோங் வெய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். #MalaysianBadminton #LeeChongWei #NoseCancer
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரரும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரருமான லீ சோங் வெய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்காமல் விலகிய லீ சோங் வெய் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அவர் மூக்கில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நோயின் தாக்கம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், அதற்கு தைவானில் சிகிச்சை பெறுவதாகவும் மலேசிய பேட்மிண்டன் சங்கம் நேற்று தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் மூன்று வெள்ளிப்பதக்கம் வென்றவரும், காமன்வெல்த் போட்டி சாம்பியனுமான 35 வயதான லீ சோங் வெய், மொத்தம் 69 சர்வதேச பட்டங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    35 வயதான லீ சாங் வெய் 12 முறையாக மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #MalyasianOpen
    மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 35 வயதான மலேசியாவின் லீ சாங் வெய், 23 வயது இளம் வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். இதில் சொந்த ஊரில் விளையாடிய அனுபவ வீரரான லீ சாங் வெய் 21-17, 23-21 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 12 முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் தொடர் அரையிறுதிப் போட்டியில் மொமோட்டா லீயை வீழ்த்தியிருந்தார். அதற்கு தற்போது லீ பதிலடி கொடுத்துள்ளார்.



    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் சு யிங் சீனாவின் ஹி பிங்ஜியாவோவை 22-20, 21-11 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
    ×