என் மலர்

  நீங்கள் தேடியது "leaves delhi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் 7 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று இரவு டெல்லி புறப்பட்டார். #VenkaiahNaidu #Africa
  லிலோங்வே:

  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
   
  தனது பயணத்தின் முதல் நாடாக போட்ஸ்வானாவுக்கு சென்றார். சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்தியா - போட்ஸ்வானா இடையேயான சந்திப்பில், அந்நாட்டு துணை ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். போட்ஸ்வானாவின் 13-ம் ஆண்டு உலகளாவிய வருடாந்திர கண்காட்சியை துவங்கி வைத்தார் தொடர்ந்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களிடம் கலந்துரையாடினார்.

  அதைத் தொடர்ந்து, இரண்டாவது நாடாக ஜிம்பாப்வே சென்றார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு. அந்நாட்டு அதிபர், துணை ஜனாதிபதி, வெளியுறவுத்துறை மந்திரி, சபாநாயகர் ஆகியோரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

  தனது பயணத்தின் இறுதியாக, மலாவி சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்த நாட்டின் அதிபர் மற்றும் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினார். இந்தியா-மலாவி இடையே அமைதியான நோக்கத்துக்கான அணுசக்தி உற்பத்தி, இருநாடுகளில் இருந்தும் தேடப்படும் நபர்களை ஒப்படைத்தல் ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

  இந்நிலையில், ஜிம்பாப்வே, போட்ஸ்வானா மற்றும் மலாவி உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் தனது 7 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று இரவு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். #VenkaiahNaidu #Africa
  ×