search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leading companies"

    • இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும்.
    • இச்சான்றிதல் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் தஞ்சாவூர், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நாளை (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ. பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    மேலும் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் பிரசர் அப்ரன்டீசாக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படைப் பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதல் பெறலாம்.

    இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000 முதல் நிறுவனத்தால் வழங்கப்படும். இச்சான்றிதல் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நாடுகளிலும் பணிபுரிந்திட பயனுள்ளதாக அமையும்.

    மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், தஞ்சாவூர். தொலை பேசி எண்: 04362-278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×