என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "leader arrested"

    • கொம்பேறி பட்டி பள்ளிக்கூடம் பின்புறம் சூதாட்டம் நடை பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சூதாட்ட கும்பல் தலைவனாக இருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கொம்பேறி பட்டி, புத்தூர், பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து இரவு நேர சூதாட்டம் நடைபெற்று வந்தது. இந்த சூதாட்டத்தில் வெளியூர்களை சேர்ந்த நபர்களும் சொகுசு காரில் வந்து விளையாடி தங்கள் பணம் மற்றும் நகைகளை இழந்து வந்தனர்.

    சூதாட்ட தகராறில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. எனவே இக்கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கொம்பேறி பட்டி பள்ளிக்கூடம் பின்புறம் சூதாட்டம் நடை பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கொம்பேறி பட்டியை சேர்ந்த ராசு(30), வடமதுரை வெங்கடேஷ்(45), அய்யலூர் சேகர்(43) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் சேகர் மற்றும் வெங்கடேஷ் தப்பிஓடி விட்டனர். சூதாட்ட கும்பல் தலைவனாக இருந்த ராசு என்பவரை போலீசார் கைது செய்து வேட சந்தூர்கோர்ட்டில் ஆஜர்படு த்தினர். தொடர்ந்து இப்பகுதியில் நடைபெறும் சூதாட்டத்தை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×