search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lawyer association demonstration"

    பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கண்டித்து, வக்கில் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வக்கீல் சங்க உறுப்பினர் எஸ். மோகன், தனது மனுதாரருடன் பெரம்பலூர் காவல் நிலையத்துக்கு சில தினங்களுக்கு முன்பு சென்ற போது, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப்-இன்ஸ் பெக்டர் மோனிகா ஆகியோர் வழக்கீலை தகராறு செய்து, காவல் நிலையத்திலிருந்து வெளியேற வேண்டுமென கூறினார்களாம். 

    இதேபோல, வழக்கு சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு செல்லும் வழக்கறிஞர்களை ஒருமையில் பேசுவதாக கூறப்படுகிறது. 
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது துறை சார்ந்த  நடவடிக்கைஎடுக்க வேண்டு மென வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கடந்த ஜுன்-18 முதல் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், கடந்த 8 நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர் ராஜ் முன்னிலை வகித்தனர். இதில், 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ் பெக்டரை பணியிடை  மாற்றம் செய்யும் வரை தங்களது போராட்டம் தொடரும் என, வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
    ×