என் மலர்
நீங்கள் தேடியது "Launch of the Rainbow Forum"
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.
- அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் என்ற பாடங்களை அடிப்படையாக வைத்து ஸ்டெம் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்செங்கோடு:
அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நி லைப் பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது. விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் மன்றத்தை தொடங்கி வைத்தனர்.
தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ- மாணவிகள் பாடங்கள் தவிர்த்து தனித் திறனை வளர்த்துக் கொள்ளவும் பணிபுரிய ஏதுவாகவும் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் என்ற பாடங்களை அடிப்படையாக வைத்து ஸ்டெம் என்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதைப் போலவே அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறனை வளர்த்துக் கொள்ள ஏதுவாக வானவில் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அரசு பள்ளிகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் உழைத்து வருகிறார் எனவும் மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தெரிவித்தார்.
இந்த விழாவில் பள்ளி யின் தலைமை ஆசிரியை அரங்கநாயகி மற்றும் ஆசிரியைகள், மேற்கு மாவட்ட திமுக மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, மாநில பொதுக்குழு உறுப்பி னர் மயில்சாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






