search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Language of communication"

    • ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதன் மூலம் தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கள் ஆளுமையை செலுத்த முடிவதாக தெரிவித்தார்.
    • மாநில மொழியை தொடர்பு மொழியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள ம.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்தில் ம.தி.மு.க.வின் அவை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.துரைசாமி நிருபர்களுக்குபேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் இந்தியை திணிக்கும் முயற்சியில் பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    வரும் 9-ந் தேதி கூட உள்ள தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழை மத்திய தொடர்பு மொழியாக அறிவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .அதனை மத்திய அரசு நிராகரிக்கும் பட்சத்தில் மத்திய அரசின் உண்மை தன்மையை மக்கள் அறிந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு தகுந்த பாடத்தை புகட்டுவர் .

    இதேபோல் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலங்களும் மாநில மொழியை தொடர்பு மொழியாக அறிவிக்க தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும்.

    இந்தி மொழி பேசும் மாநிலங்கள் எல்லாம் ஆங்கில மொழியினை கட்டாய மொழியாக்கி கொண்டு தமிழகத்தில் பா.ஜ.க. இந்தியை திணிக்க முயற்சித்து வருகிறது.

    ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருப்பதன் மூலம் தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கள் ஆளுமையை செலுத்த முடிவதாக தெரிவித்தார்.

    ம.தி.மு.க.வின் வாரிசு அரசியல் குறித்த கேள்விக்கு மாற்றங்கள் தவிர்க்க முடியாதது எனவும் ம.தி.மு.க.வின் எதிர்காலம் அதன் நடவடிக்கைகளை பொறுத்து அமையும் எனவும் தெரிவித்தார்.

    ×