என் மலர்
நீங்கள் தேடியது "Land for park and college"
- மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது
- ஏராளானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி மக்கள் குறைத்தீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு குடியாத்தம் உதவி கலெக்டர் எம். வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
குடியாத்தம் தாசில்தார் எஸ்.விஜயகுமார், பேரணாம்பட்டு தாசில்தார் வி.கே.நெடுமாறன், சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் எம்.நெடுமாறன், ஏ.சி. விநாயகமூர்த்தி, ரமேஷ் வட்டார வளர்ச்சி அலுவலர், எஸ்.சாந்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் மகளிர் கல்லூரி அமைக்க நிலம் கையகப்படுத்துவது, சிப்காட் தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்துவது, கைத்தறி ஜவுளி பூங்கா அமைப்பதற்கான தேவையான இடங்களை பார்வையிட்டு கையகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.
இந்தப் பணிகளுக்கு தேவையான இடங்களை கண்டறிந்து உடனடியாக களப்பணி ஆய்வு செய்யவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.






