என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "labourers died"

    மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே ஜவுளி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். #PuneFire
    புனே:

    மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள உருளி தேவாச்சி கிராமத்தில் ஜவுளி குடோன் உள்ளது. இந்த குடோனின் ஒரு பகுதியில் இன்று அதிகாலை தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியது. துணி பண்டல்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் குடோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

    இதுபற்றி உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 4 வாகனங்களில் சென்று கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.



    இந்த தீ விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகள் கருகி சாம்பலாகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuneFire 
    நெல்லை அருகே கிணறு தோண்டும்போது மண் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். #WellDigging #Labourers
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது அத்தியூத்து கிராமம். இங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது கிணற்றின் ஒரு பகுதியில் இருந்து மண் சரிந்தது. 

    இதனால் கிணற்றுக்குள் இருந்த தொழிலாளர்கள் மீது மண் விழுந்து அமுக்கியது. இதில் மதி, சோணாச்சலம், சுடலை ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களை சடலமாக மீட்டனர். 

    3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #WellDigging #Labourers
    ×