என் மலர்

  நீங்கள் தேடியது "Kuniyamuthur youth death"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குனியமுத்தூர் அருகே செல்போன் பேசியபோது மாடியில் இருந்து தவறி விழுந்து டீ மாஸ்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை:

  கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சிவதாஸ் (வயது 40). இவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள விஜயலட்சுமி மில் பகுதியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் மாஸ்ட்டராக வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று இவர் 2-வது மாடியில் நின்று கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சிவதாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவதாஸ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து குனியமுத்துர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  ×