search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kozhikode Flowe"

    • கோழிக் கொண்டை பூக்கள் மாலை கட்ட அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
    • மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை இருந்தும் லாபம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    கோழிக் கொண்டை பூக்கள் மாலை கட்ட அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எப்பொழுதும் தேவை இருப்பதால் கணிசமான விவசாயிகள் கோழிக் கொண்டை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தற்போது ஒரு கிலோ 60 ரூபாய் வரை விலை போகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் களைகள் அதிகம் வளர்ந்துள்ளது. பூச்செடிக்கான ஊட்டச்சத்துக்களை களைச் செடிகளும் பகிர்ந்து கொள்வதால் பூச்செடி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை.

    பல நேரங்களில் 40 ரூபாய்க்கு குறைவாக விலை போவதுண்டு. இந்த சீசனில் தான் ஓரளவு கட்டுப்படியான விலை கிடைக்கிறது. மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை இருந்தும் லாபம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது கோழி கொண்டை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    ×