என் மலர்
நீங்கள் தேடியது "Koyambedu lorry driver threat"
கோயம்பேட்டில் லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பறித்த போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
போரூர்:
கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் கலைவாணன். கடந்த 18-ந் தேதி இவர் கோயம்பேடு 100 அடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது பட்டாசு ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி விசாரித்தார். போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி லாரியில் இருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு பண்டல்களை போலீஸ்காரர் கலைவாணன் எடுத்து சென்று விட்டார்.
இது குறித்து லாரி உரிமையாளர், கோயம்பேடு உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். விசாரணையில் போலீஸ்காரர் கலைவாணன், லாரி டிரைவரை மிரட்டி பட்டாசு பண்டல்களை எடுத்து சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் கலைவாணனை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.






