என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koraput"

    • மாநிலத்தின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் அனைத்து சலுகைகளையும் பெறுவார்
    • கோராபுட் மாவட்டம் ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்டது.

    ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்டம் நக்சல் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களில் ஒருவரான மம்தா போடியாமி என்பவர் போலீசாரிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

    மம்தா போடியாமி ஒரு எஸ்.எல்.ஆர் துப்பாக்கியுடன் சரணடைந்ததாகவும் தென்மேற்கு மண்டல டி.ஐ.ஜி கன்வர் விஷால் சிங் தெரிவித்தார். "அவரது தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 5.5 லட்சம் நிதி உதவியும், ஆயுதத்தை ஒப்படைப்பவருக்கு கூடுதலாக ரூ.1.65 லட்சமும் வழங்கப்படும் . மேலும், மாநிலத்தின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கையின் கீழ் அனைத்து சலுகைகளையும் அவர் பெறுவார்" என்றும் தெரிவித்தார்.

    மேலும் அவர் சரணடைந்த பிறகு, கோராபுட் இப்போது நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது என்றும் விஷால் சிங் தெரிவித்தார். கோராபுட் மாவட்டத்திற்கு முன்னதாகவே, அண்டை மாவட்டங்களான மால்காங்கிரி மற்றும் நவரங்பூர்  ஆகியவையும் நக்சல் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. 

    கோராபுட் மாவட்டம் ஒரு காலத்தில் நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்பட்டது. குறிப்பாக 2009-ல் டாமன்ஜோடியில் நடந்த தாக்குதல் போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, தற்போது இது நக்சல் இல்லாத மாவட்டமாக மாறியிருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

    ×