என் மலர்
நீங்கள் தேடியது "Khadi Exhibition"
- கைவினை பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது
- ராணுவ அதிகாரிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே உள்ள வெங்கடேசபுரத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழக அரசின் கதர்துறை சார்பில் சிறப்பு பொருட்காட்சி நடைபெற்றது.
இதில் கதர் ஆடைகள் மற்றும் கைத்தறி ஆடைகள், பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் மகளிர் குழு சார்பில் தயார் செய்யப்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியில் ஐ.என்.எஸ் ராஜாளியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு பல்வேறு பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
காதி தலைமை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார் கலந்து கொண்டு வீரர்களுக்கு காதி பொருட்கள் குறித்த சிறப்புகளை கூறினார்.






