search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Haj Committee"

    புனித யாத்திரைக்கான விமான கட்டணத்தில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதற்கு கேரளா மாநில ஹஜ் கமிட்டி நன்றி தெரிவித்துள்ளது. #GST #GSTCouncilMeeting #KeralaHajCommittee
    புதுடெல்லி:

    நாட்டின் மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு கொண்டுவரப்பட்டது. 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக ஜி.எஸ்.டி. வரி சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
     
    வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்து முடிவெடுக்க மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 

    இதற்கிடையே, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க முடிவானது.
     


    இதில், அனைத்து மதத்தினருக்கான புனித யாத்திரை மற்றும் பக்தி சுற்றுலாவுக்கான விமான கட்டணத்தின் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புனித யாத்திரைக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளதற்கு கேரளா மாநில ஹஜ் கமிட்டியினர் நன்றி தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ஹஜ் கமிட்டி தலைவர் மொகமது பெய்சி கூறுகையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மற்றும் ஜி.எஸ்.டி. கவுன்சில் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #GST #GSTCouncilMeeting #KeralaHajCommittee
    ×