search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kathiramangalam"

    கதிராமங்கலம் வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். #ProfessorJayaraman #ONGC
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமைத்திருந்த குழாய் பழுதடைந்தது.

    இந்த பழுதை நீக்க அந்த நிறுவனத்தினர் தனது ஊழியர்களுடன் சென்றனர். அங்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் திருவிடைமருதூர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஜெயராமன், வக்கீல் கரிகாலன், ராஜி, தர்மராஜ், விஜயராகவன், சீனிவாசன், சேதுராஜா, கொளஞ்சிநாதன், கருணாநிதி, பிரபு ஆகிய 10 பேர் மீது ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் ஊழியர்களை பணி செய்யாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி புகார் அளித்தனர்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு நீதிபதி சண்முகப்பிரியா குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார்.  #ProfessorJayaraman #ONGC


    ×