என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Election Result 2023"

    • ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்துள்ளது.
    • தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடகா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்துள்ளது.

    கர்நாடாகவில் ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    • பாஜகவினரின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன்.
    • மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவினரின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள் எனவும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும் தனது டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    ×