என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka Central Minister Ananth Kumar"
பெங்களூரு:
மத்திய மந்திரி அனந்த குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அரசு செயல்படாமல் இருப்பதால் அந்த கட்சியினரே அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனையே முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா வெளிப்படுத்தி உள்ளார். அவர் மீண்டும் முதல் மந்திரியாக துடிக்கிறார்.
குமாரசாமி அரசு வளராத குழந்தையாக இருக்கிறது. மந்திரி சபை விரிவாக்கம், துறை ஒதுக்கீடு உள்ளிட்டவை இன்னும் நடைபெறாமல் இருக்கின்றன.
காங்கிரஸ்-ஜே.டி.எஸ். ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே வெளிப்படையாகவே மோதல் நடந்து வருகிறது. இந்த கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. எனவே தான் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த கூட்டணி விரைவில் கவிழ்ந்தவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்ற பாரதிய ஜனதா ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், சிறப்பாக ஆட்சி நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.






