search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka bus accident"

    பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Mandyabus #kumarasamy
    மண்டியா :

    மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து மண்டியாவுக்கு கடந்த 24-ந் தேதி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில் பள்ளி மாணவ-மாணவிகள் பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அந்த பஸ் கனகனமரடி பகுதியில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்- மந்திரி சித்தராமையா, மந்திரிகள் டி.சி.தம்மண்ணா, புட்டராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியானவர்களின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

    இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று மண்டியாவில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாண்டவபுரா தாலுகா கனகனமரடி பகுதியில் கால்வாயில் பஸ் பாய்ந்து 30 பேர் பலியான சம்பவம் துரதிர்ஷ்ட வசமானது. இறந்தவர்களின் குடும்பத்தினர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இருக்க மாட்டார்கள்.

    விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்து இருந்தேன். அதன்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விரைவில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mandyabus #kumarasamy
    ×