search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka bandh"

    • செவ்வாய், வெள்ளி என இரு நாட்கள் கடையடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது
    • கோவிட்-19 பெருந்தோற்றில் நலிவடைந்த பொருளாதாரம் இப்போதுதான் மீண்டு வருகிறது

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் நீண்ட காலமாக காவிரி நதி நீர் பங்கீட்டில் பிரச்சனை இருந்து வருகிறது. காவிரி நீரை திறந்து விட வேண்டிய கர்நாடகா, ஏதாவது காரணங்களை கூறி திறந்து விட மறுப்பதால், தமிழ்நாட்டில் விவசாய பாசனத்திற்கு உரிய நேரத்தில் தேவையான நீர் கிடைக்காமல் விவசாயிகள் வருந்தும் நிலை உள்ளது.

    இரு மாநிலங்களிலும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் பரஸ்பரம் சமாதான பேச்சின் மூலம் இதற்கு தீர்வு காண பல முயற்சிகள் செய்தும் சுமூக தீர்வை எட்ட முடியவில்லை. இச்சிக்கலுக்கு தீர்வு பெற தமிழ்நாடு உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றமும் தமிழகத்திற்கு தேவையான நீர் வழங்க கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது.

    ஆனால், உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கர்நாடகா மதித்து நீர் வழங்குவதை கர்நாடகாவிலுள்ள விவசாய அமைப்புகள் எதிர்த்து இந்த வாரம் முழு கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்தன. இதனையடுத்து, இந்த வாரம் கடந்த செவ்வாய்கிழமையன்றும், இன்றும் (வெள்ளிக்கிழமை) என இரு நாட்கள் கர்நாடகா மாநிலம் முழுவதும் 'பந்த்' அனுசரிக்கப்படுகிறது.

    ஆனால், இந்த முடிவிற்கு தொழில்துறை தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த 2 நாள் முழு அடைப்பின் விளைவாக கர்நாடகாவின் தொழில்துறைக்கு மொத்தமாக ரூ.4000 கோடி மதிப்பிற்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பிலிருந்து தற்போது ஓரளவு மீண்டு வரும் மாநில பொருளாதாரம், இந்த பெரும் நஷ்டத்தை தாங்கும் நிலையில் இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    செவ்வாய்கிழமையன்று ஒரு நாள் கடையடைப்பிற்கு சம்மதம் தெரிவித்த சில வர்த்தக அமைப்புகள் கூட மீண்டும் வெள்ளிக்கிழமையன்று முழு கடையடைப்பு நடத்துவதை ஏற்க மறுக்கின்றனர். "எதிர்ப்பு தெரிவித்து போராடுவது வேறு, கடையடைப்பு நடத்துவது வேறு" என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

    பொது மக்களின் வாழ்விற்கும் இடையூறு ஏற்படுத்தி, பெரும் பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஒரே வாரத்தில் நடைபெறும் இந்த கடையடைப்பினால் கர்நாடகம் சாதிக்க போவது என்ன என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவுகிறது.

    ×