search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kannum pongal"

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை, பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர். #KannumPongal
    பொன்னேரி:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற்கரை, பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் குடும்பத்துடன் சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர்.

    பழவேற்காட்டில் இன்று காலை முதல் பொது மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். அவர்கள் பழவேற்காடு கடற்கரை டச்சுகல்லறை, லைட்அவுஸ் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு வந்த உணவை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். லைட்அவுஸ் குப்பம், செம்பாசிபள்ளி குப்பம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. படகு சவாரி, கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட காலையிலே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. புரதான சின்னங்களான கடற்கரை கோவில், புலிக்குகை, அர்ச்சுனன் தபசு, பட்டர் பால், ஐந்துரதம் மற்றும் குடவரை கோவில் பகுதிகளை அவர்கள் கண்டு ரசித்தனர்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி, முதலை பண்ணை, திருவிடந்தை, பட்டிபுலம், தேவநேரி கடற்கரை பகுதியிலும் மக்கள் கூட்டம் இருந்தது.  #KannumPongal
    ×