search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamudi Union"

    • கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்.

    பசும்பொன்

    கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரபாண்டியன், துணை சேர்மன் சித்ராதேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேனேஜர் ராமச்சந்திரன் வரவேற்றார். 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

    தமிழ் செல்வி போஸ் (சேர்மன்): குடிநீர் தேவையை உடனுக்குடன் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் கவுன்சிலர்கள் கோரிக்கைகளை துணிச்சலுடன் கேளுங்கள். அனைத்தும் செய்து கொடுக்கப்படும். அன்பரசு (பேரையூர்): பேரையூர் கண்மாய்கரை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலையில் அரசு அறிவித்துள்ள ரூ.294-ஐ வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையாளர்: 100 நாள் வேலை திட்டத்தில் அரசு விதிமுறைப்படி வழங்குகிறோம்.அன்பரசு (பேரையூர்): வேளாண் காலங்களில் 100 நாள் வேலை நடத்தப்படுவதில் வேளாண்மை பாதிக்கப்படுகிறது. ஆணையாளர்: 100 நாள் வேலை பணியாளர்களை வேளாண் பணிக்கு பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாக்குவெட்டி குடிநீர் திட்டபணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும். பல்வேறு குடிநீர் திட்டபணிகள் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால் விரைவில் குடிநீரில் தன்னிறைவு பெறுவோம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    ×