என் மலர்

  நீங்கள் தேடியது "Kallaru"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உணவு, தண்ணீர் உட்கொள் முடியாமல் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.
  • கல்லார் ஆற்றில் தண்ணீர் குடிக்க அந்த யானை வந்துள்ளது.

  மேட்டுப்பாளையம்:

  மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டுயானை ஒன்று நடமாடி வருவது கண்டறியப்பட்டுள்ளது. யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டு உணவு, தண்ணீர் உட்கொள் முடியாமல் அவதி அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் மேட்டுப்பாளையம் -குன்னூர் சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே உடல் மெலிந்த நிலையில் கல்லார் ஆற்றில் தண்ணீர் குடிக்க அந்த யானை வந்துள்ளது. அப்போது அந்து வழியைச் சென்ற பொதுமக்கள் யானையைப் பார்த்தவுடன் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர்.

  அதில் யானை தண்ணீர் குடிக்க சிரமப்பட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் அந்தக் காட்டு யானை கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் சுற்றி வருவதாக மக்கள் தெரிவித்தனர். தற்போது செல்போன் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

  இந்த தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறை சார்பில் வனத்துறை மற்றும் கால்நடை டாக்டர்கள் அடங்கிய சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் இன்று கல்லாறு உடல்நலக்கு–றைவுடன் சுற்றும் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்கா–ணித்து வருகின்றனர்.

  கால்நடை மருத்துவர் அடங்கிய குழுவினர் யானைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் பிற மருந்துகளை பழங்களில் திணித்து யானை வரும் இடத்தில் வைத்து வருகின்றனர்.

  இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் காயத்துடன் சுற்றும் காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளிப்பதற்காக வன கால்நடை அலுவலர் ஏ.சுகுமார், மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் களப் பணியாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வனத்தில் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர். 

  ×