search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalikambal Temble"

    • காளிகாம்பாள்-பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் அம்சமாய் வீற்றிருக்கின்றாள்.
    • திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட அர்த்தமேரு அமைந்துள்ளது.

    ''துவஜஸ் தம்பத்திற்கு'' கிழக்கேயுள்ள கர்ப்ப கிரஹத்தினுள் அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் அர்த்த பத்மாசனத்தில் பாச, அங்குசத்தைக் கையிலேந்தி, கமலத்தில் புன்னகை செய்கின்றாள். அம்பாளின் திருவடியில் பிருங்கி மகரிஷியின் கொள்ளு பேரனும் துவஷ்ட விஸ்வகர்மாவின் மகனுமான பிரம்ம ரிஷி ஸ்ரீவிஸ்வரூபனின் (திரிசிரன்) மூன்று தலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

    (ஆதாரம்: வியாச முனிவர் அருளிய ஸ்ரீமத் பாகவதம், துவைபாயன முனிவர் அருளிய ஸ்ரீதேவி பாகவதம், ஸ்ரீநாராயண பட்டதிரி அருளிய ஸ்ரீநாராயணீயம்)

    ஸ்ரீஅம்பாள் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். அன்னையின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரர் ரால் நிறுவப்பட்ட அர்த்தமேரு அமைந்துள்ளது.

    மூலவர் உட்பிரகாரத்திற்கு மேற்கில் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது. ஸ்ரீஅம்பாள் பெரிய நாயகி (உற்சவர்) மகா தேஜசுடன் மகாலட்சுமியாகவும், மகா சரஸ்வதியாகவும் இரு பக்கங்களிலும் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.

    ''ஸசாமர ரமாவாணி ஸ்வயதட்சிண ஸேவிதா'' என்று ஸ்ரீலலிதா சகஸ்ர நாமத்தில் கூறப்பட்டுள்ளது. லட்சுமி தேவியும், சரஸ்வதி தேவியும் தன்னுடைய வலது இடது பக்கத்திலும் வெண்சாமரத்துடன் நின்று சேவிக்கப்படுபவள் என்பது இதன் கருத்து.

    அம்பாளின் முன்னிலையில் திருமகளும் கலைமகளும் பணிப்பெண்களாக இருந்து பணிபுரிகின்றனர். உலக நடைமுறையில் செல்வமும், கல்வியும் சேர்ந்திருப்பதைக் காண்பது அரிது. ஆனால், அம்பாளின் அருளுக்கு பாத்திரமாகின்றவர்களிடம் கல்வியும் செல்வமும் சேர்ந்தே அமையும் என்பது உறுதி.

    பெரிய நாயகி உற்சவர் அம்பாளே கிண்ணித்தேரில் திருவீதி வலம் வருகிறாள். ஸ்ரீஅம்பாள் சிறிய நாயகி உற்சவர் பெரும்பாலும் கோவில் பிரகார மண்டபத்துக்குள்ளேயே பிரதட்சணம் வருவதுண்டு. உற்சவர் மண்டபத்திற்கு கிழக்கில் சிற்ப வேலைபாடுகளுடன் கருங்கல்லிலான பதினாறு கால் மண்டபம் அழகுற அமைந்துள்ளது.

    இந்த மண்டபத்தில் எட்டு தூண்களில் அஷ்டாட்சரியை நினைவூட்டும் வகையில் சிற்சிறு வடிவங்களில் பாலகிருஷ்ணன் சிறிய திருவடி வழிபடும் பெண் தபசி, பெண் சேவார்த்திகள் சிற்பங்கள் அமைந்துள்ளன. காளிகாம்பாள்-பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரின் அம்சமாய் வீற்றிருக்கின்றாள்.

    ஸ்ரீகாளிகாம்பாள் சந்நிதி கருவறையின் முன்பு 12 கால் மண்டபம் அமைந்துள்ளது. விமானம் மேற்கட்டியில் - பாம்பு - சூரிய சந்திரனைப் பற்றுவது போல் அமைந்துள்ளனர். மீன்கள் சிறியதும் பெரியதும் உலாவுவது போன்ற கடற்காட்சியை அமைத்துள்ளார்கள். வாஸ்து முறைப்படி அமைந்த திருக்கோவிலாக அமைந்துள்ளது காளிகாம்பாள் திருக்கோவில்.

    முதற்பிரகாரம் வலம் வரும் போது அக்னி மூலை மடப்பள்ளி. அடுத்து தென் கிழக்கு. உற்சவர் வீதிவுலா புறப்படுமுன் கண்ணாடி சேவை தென் சுவரில். சுதை வேலை சத்ரபதி சிவாஜி அம்பாளை தொழுது வழிபடும் காட்சி. பாரதியார் அருகில் நிற்கிறார்.

    அடுத்து காமாட்சியை ஆதிசங்கராச்சாரியார் வழிபடும் காட்சி. மேல் வரிசையில் தென்மேற்கு மூலையில் சித்தி விநாயகர் கம்பீரமாக அமர்ந்து காட்சித் தருகின்றார். மேற்குக் குட வாயில் கோட்டம் திரிசூலம் (துவஜஸ்தம்பம்) கொடி மரம் இருபுறம் துவார பாலகியர் நின்று அம்மனை தரிசிக்க வழி அனுப்புகின்றனர்.

    வடமேற்குப் பகுதியில் துணைவிகள் சமேதராக இருக்கும் அபூர்வ சித்தி-புத்தி விநாயகரும், அருகிலிருக்கும் அகோர வீரபத்திர சுவாமி, மாகாளியும் மகிமை நிறைந்தவர்கள். பவுர்ணமி நாளன்று அகோர வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை சாத்தினால் - பில்லி - சூனியம் - பேய் - பிசாசு போன்றவை எது பற்றியிருந்தாலும் உடனே விலகி விடும்.

    வடகதிர்காம முருகப்பெருமான் ஸ்ரீவள்ளி தேவசேனையுடன் அருள்புரிகின்றார். சஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு அமர்ந்துதான் ''உள்ளம் உருகுதைய்யா'' என்ற பாடலை அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் 1952-ல் பாடியுள்ளார் என்பது கல்வெட்டுச் செய்தியாகும். அப்பாடலை பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் பாடியுள்ளார்.

    அடுத்த கோ மடம் - நாகேந்திரர் சன்னதி - ஸ்ரீவிராட்விஸ்வ பரப்பிரம்மம் சன்னதி அமைந்துள்ளது. அதன் எதிரில் ஸ்ரீகாயத்ரி தேவி சன்னதியும், ஸ்ரீதுர்க்கை சன்னதியும் அமைந்துள்ளன. துர்க்கை சன்னதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பக்தர்கள் எலுமிச்சம் பழம் விளக்கேற்றியும் நெய் விளக்கேற்றியும் வழிபாடு செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும்.

    வடகிழக்கில் தெற்கு நோக்கி வெள்ளித் தேர் மற்றும் வாகன மண்டபம் அருகில் அறங்காவலர் அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. அடுத்து நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடராஜர் அபிஷேகம் திருவாதிரை உற்சவம் - மாணிக்க வாசகர் விழா சிறப்பு சொற்பொழிவுடன் திருவாசகம் ஓதப்பெற்று நடைபெற்று வருகிறது.

    ×