search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalaignar People's Service Camp"

    • 749பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
    • உறுப்பினர் சிவக்குமார் மற்றும் நகர தி.மு.க. செயலாளர் வசந்தம் சேமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கயம்:

    காங்கேயம் வட்டம் சிவன்மலை ஊராட்சி ஸ்ரீ அண்ணாமலை செட்டியார் திருமண மண்டபம் மற்றும் வெங்கடேஸ்வரா திருமண மண்டபங்களில் கலைஞரின் நூற்றாண்டை விழாவை முன்னிட்டு கலைஞர் மக்கள் சேவை முகாம் நடைபெற்றது. முகாமை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்து 749 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    இந்த முகாமில் பொது மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று முடிந்த வரை இங்கேயே அதற்கான தீர்வுகள் காணப்படும். குறிப்பாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகள், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கான விண்ணப்பங்கள், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்டு போன நபர்கள் அளிக்கும் விண்ணப்பங்கள், பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகைக்கான விண்ணப்பம் என பல்வேறு விதமான விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் சிவன்மலையில் முகாமிட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஏற்படக்கூடிய அனுபவங்களை வைத்து இதே போன்று மற்றபகுதியில் நடைமுறை ப்படுத்துவதற்கு இது ஒரு சோதனை ஓட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்யப்ப ட்டிருக்கிறது. மக்களுடைய ஆர்வத்திற்கு தடை ஏற்படாமல் அவர்களது எண்ணங்கள் மற்றும் விருப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த முகாம் நடைபெறும். அதே நேரத்தில் முடிந்த அளவு விண்ணப்பங்களை கொண்டு வந்திருக்கிற பொதுமக்களுக்கு அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் உரிய முறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    தொடர்ந்து வருவாய் துறையின் சார்பில் 244 பயனாளிகளுக்கு ரூ.4.46 லட்சம் மதிப்பீட்டிலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 17 பயனாளிகளுக்குரூ.15.03 லட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.44 லட்சம் மதிப்பீட்டி லும் என மொத்தம் 749பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், இணைஇயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) சீனிவாசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மதுமிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) வரலட்சுமி, முன்னோடி வங்கி மேலாளர் ரவி, காங்கேயம் வருவாய் வட்டாட்சியர் மயில்சாமி, காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகரன், விமலாதேவி, சிவன்மலை ஊராட்சி மன்றத்தலைவர் துரைசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள், காங்கயம் ஒன்றிய தெற்கு பகுதி செயலாளர் சிவானந்தன், துைணத்தலைவர் சண்முகம், உறுப்பினர் சிவக்குமார் மற்றும் நகர தி.மு.க. செயலாளர் வசந்தம் சேமலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×