search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JEWELERY ROBBERY IN LOCKED HOUSE"

    • திருச்சி அருகே பூட்டியிருந்த வீட்டில் 13 பவுன் நகைகளை திருடி விட்டு தலைமறைவான கேரளாவை சேர்ந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • கொள்ளையர்களுக்கு பயந்து தனக்கு சொந்தமான 13 பவுன் நகைகளை பீரோவில் பூட்டி வைக்காமல், படுக்கை அறையில் கொடியில் ஒரு துணியில் கட்டி பாதுகாப்பாக வைத்திருந்தார்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தியாகு. இவரது மனைவி பிலோமினாள் (வயது 54). இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பிலோமினாள் மட்டும் தனியாக அண்ணா நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான இன்னொரு வீடு அதன் அருகாமையில் உள்ளது. இந்த வீட்டில் திருநங்கை ஒருவர் வாடகைக்கு குடியிருந்தார்.

    அவருடன் கேரளாவைச் சேர்ந்த ராஜ்குமார், இந்திரன் உள்ளிட்ட மூன்று வாலிபர்களும் சமீபத்தில் வந்து தங்கி இருந்தனர். நேற்றைய தினம் திருநங்கை மட்டும் வெளியூர் புறப்பட்டு சென்றுவிட்டார்.

    இதற்கிடையே பிலோமினாள் கொள்ளையர்களுக்கு பயந்து தனக்கு சொந்தமான 13 பவுன் நகைகளை பீரோவில் பூட்டி வைக்காமல், படுக்கை அறையில் கொடியில் ஒரு துணியில் கட்டி அதன்மேல் வேறு துணிகளை போட்டு பாதுகாப்பாக வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பிலோமினாள் வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். அவரது வீட்டின் மேற்கூரை ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் குதித்தனர். பின்னர் அவர்கள் கொடியில் துணியில் கட்டி தொங்க விடப்பட்டிருந்த 13 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி பிலோமினாள் வையம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரில், தனது வீட்டில் திருநங்கையுடன் வாடகைக்கு குடியிருந்த கேரளா வாலிபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

    அதனை ஊர்ஜிதம் செய்யும் வகையில் அங்கு தங்கியிருந்த அந்த வாலிபர்கள் 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களின் செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கேரளாவுக்கு தப்பிச் சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×