என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JAIL FOR ENGINEER ARRESTED IN MURDER CASE"

    • கொலை வழக்கில் கைதான என்ஜினீயர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே கீழக்கரையை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). விவசாயியான இவர் சம்பவத்தன்று மது போதையில் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான நாராயணசாமி மனைவி செல்லத்தை தாக்கினார்.

    இதனை கண்டு ஆத்திரமடைந்த நாராயணசாமி மகன் என்ஜினீயரான ராஜாராம் (24) மூங்கில் கம்பால் செல்வத்தை அடித்ததில், அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர். பின்னர் ராஜாராமை பெரம்பலூர் போலீசார் திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

    ×