என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "It started raining with thunder and lightning"

    • விவசாய நிலத்தில் பயிர் நடவு செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள செய்யானந்தல், கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம், இவரது மனைவி வளர்மதி, (வயது 44). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். வளர்மதி நேற்று மாலை செய்யானந்தல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பயிர் நடவு செய்து கொண்டிருந்தார்.

    நேற்று மாலை திடீரென கருமேகம் சூழ இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது திடீரென வளர்மதி, மீது மின்னல் தாக்கியது.

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேத்துப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வளர்மதி, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தச்சம்பாடி, கிராம நிர்வாக அலுவலர் சேத்துப்பட்டு, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சேத்துப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×