என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel Hamad war"

    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.
    • காசாவில் நடந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    நியூயார்க்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    ஹமாஸ் நிர்வகித்து வரும் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர் குண்டு வீச்சு காரணமாக ஆயிரக்கணக்கானோர் காசாவில் உள்ள மருத்துவமனைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி உயிரிழந்த ஐ.நா. ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுவரை நடந்த போர்களிலேயே இந்தப் போரில் தான் மிக அதிக எண்ணிக்கையிலான ஐ.நா. சபை ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா.வைச் சேர்ந்த தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

    ×