என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Islam festival"
- திண்டுக்கல் அருகே சேக்பரித் ஒலியுல்லா (எ) சக்கரைபாவா சந்தனக்குட உருஸ் விழா நடைபெறுகிறது.
- ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரைஹானா மற்றும் சென்னை இறையன்பன் குத்தூஸ் ஆகியோர்களின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், புலியூர்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குளிப்பட்டியில் சேக்பரித் ஒலியுல்லா (எ) சக்கரைபாவா சந்தனக்குட உருஸ் விழா நடைபெறுகிறது.
கடந்த 30ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா வருகிற 16-ந் தேதியன்று சந்தனக்குட உருஸ் விழா நடைபெறுகிறது. 16-ந் தேதி மாலை வாசனை யுடன் போர்வை ஊர்வலம், அதிகாலை சந்தனம் வழங்குதல் நடைபெறும். அன்று மாலை ஹத்தமல் குர்ஆன் நிறைவுக்குப் பின்னர் புனிதக்கொடி இறக்குதல் நடைபெறுகிறது.
16-ந் தேதி இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ரைஹானா மற்றும் சென்னை இறையன்பன் குத்தூஸ் ஆகியோர்களின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. உருஸ் விழா நாட்களில் வண்ண மின் விளக்குகளின் அலங்காரங்கள், வியப்பூட்டும் சிறப்பு வித்வான்களின் நாதஸ்வரங்கள், பேண்ட் செட் வாத்தியங்கள், நகைப்பூட்டும் நையாண்டி மேளங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
எனவே அனைத்து மக்களும் தவறாது வருகை தந்து அருளைப் பெற்றுச் செல்லுமாறு ஹக்தார்ஹசன் பரீதீன் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்.