என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Iran Foot ball Team"

    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தங்கள் அணி விளையாடிய போட்டியை ஈரான் ரசிகைகள் பொது மைதானத்தில் பார்த்து ரசித்தனர். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஈரான் அணி ‘பி’ பிரவில் இடம்பிடித்துள்ளது. ஈரான் தனது முதல் ஆட்டத்தில் மொராக்கோவை வீழ்த்தியது.

    நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பலம்வாய்ந்த ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஈரான் 0-1 என தோல்வியை சந்தித்தது. என்றாலும் கடைசி ஆட்டத்தில் போர்ச்சுக்கலை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளது.



    இங்கு தோல்வியடைந்த அதேசமயத்தில் ஈரானில் உள்ள பெண் ரசிகைகள் அனைவரது உள்ளத்தையும் வென்றுள்ளனர்.

    பொதுவாக ஈரானில் பெண்களுக்கு பொது இடங்களில், பொது மைதானங்களில் போட்டிகளை பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. ஈரானில் உள்ள அஜாதி மற்றும் தாக்தியில் உள்ள பொது மைதானங்களில் பெண்கள் ஆண்களோடு சேர்ந்து போட்டியை ரசித்து சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இருக்கம் எனக் கூறப்படுகிறது.



    இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தை பார்க்க பெண் ரசிகைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டதால் ஏராளமான ரசிகைகள் தங்களது அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, ஆரவாரத்துடன் தங்களது அணி விளையாடும் போட்டியை ராட்சத திரையில் பார்த்து மகிழ்ந்தது.



    ஈரானின் இந்த முடிவை ஏராளமானோர் வரவேற்றுள்ளனர். ஸ்பெயின் அணி கேப்டன் செர்ஜியோ ரமோசும் ‘‘அவர்களும் இன்றிரவு வெற்றி பெற்றவர்கள்தான். இது மேலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று டுவிட் செய்துள்ளார்.
    ×