என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Investigating officer should be changed"

    • மின் மீட்டரை எரித்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நடைபெற உள்ள விசாரணையை ரத்து செய்ய வேண்டும்
    • விசாரணைக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி மீது பல்வேறு புகார்கள் உள்ளன.

    திருப்பூர் : 

    திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருப்பூரில் மின் மீட்டரை எரித்து மோசடி செய்த சம்பவம் தொடர்பாக நடைபெற உள்ள விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை விசாரணை அதிகாரியை மாற்ற வில்லை. விசாரணைக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி மீது பல்வேறு புகார்கள் உள்ளன. ஏற்கனவே பல்வேறு புகார்களுக்கு ஆளான ஒரு அதிகாரியை அதே புகாரை விசாரிக்க நியமிக்கப்பட்டது சட்டவிரோத செயலாகும். திருப்பூர் டவுன் தெற்கு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் மின்சார மீட்டரை எரித்து பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது. புகார் தொடர்பாக அரசிற்கு வர வேண்டிய ரூ.17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு மோசடியில் ஈடுபட்டவர்களில் முதல் கட்டமாக 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த மோசடிகளில் தொடர்புடைய மேலும் 6 பேர் மீது நடவடிக்கை எடுத்து அனைவர் மீதும் குற்றவியல் நடவடிக்கையின் மூலமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.விசாரணை அதிகாரியை மாற்றி நியாயமான முறையில் விசாரணை நடைபெற நடுநிலையாக செயல்படும் ஒருவரை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ×