என் மலர்
நீங்கள் தேடியது "INTEREST SHOULD BE COMPLETELY ELIMINATED"
- கந்து வட்டி கொடுமையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
- வீட்டு வரி உயர்வை பரிசீலனை செய்ய வேண்டும்
கரூர்:
கரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் நகர 10வது மாநாடு நடைபெற்றது. மாநாட்டு கொடியை ராஜாமணி ஏற்றிவைத்தார். மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் ஜெயபால், அப்பாவு, புஷ்பா ஆகியோர் செய்திருந்தனர்.
இந்த மாநாட்டில் 11 பேர் நகர குழு நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் கரூர் நகர மத்தியில் ஓடும் அமராவதி ஆறு தண்ணீர் சாக்கடை கழிவுநீர் கலந்து மனிதன் உபயோகப்படுத்த முடியாத கருப்பு கலர் தண்ணீராக செல்கிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் சாதாரண ஏழை எளிய மக்கள் கடுமையான நோய்க்கு ஆளாகிவருகின்றனர். உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி அமராவதியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
கரூர் நகர பஸ் நிலையத்தின் மத்தியில் உள்ள பொது கழிப்பறை மிகவும் சுகாதாரம் இல்லாத நிலையில் உள்ளது. இது தொற்று நோய் பரவல் காலமாக இருப்பதால் தனியாக மாநகராட்சி ஊழியர் அமைத்து சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீட்டு வரி உயர்வை பரிசீலனை செய்ய வேண்டும். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் கந்துவட்டி சட்டம் கடுமையாக அமல்படுத்த வேண்டும். கரூர் குளத்துப்பாளையம் குகை வழிப்பாதையில் எப்போதும் நீர் நிரம்பி காணப்படுகிறது அதில் நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






