என் மலர்
நீங்கள் தேடியது "industrious daughter missing"
கும்பகோணம்:
கும்பகோணம் சென்னை பைபாஸ் சாலை ஆட்டோ நகரை சேர்ந்தவர் ராஜன் தொழில் அதிபர். இவரது மகள் லட்சுமி (வயது 24) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் பி.எஸ்.சி. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் லட்சுமிக்கும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுவதாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த லட்சுமி வெளியே சென்றுவிட்டு வருவதாக புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.
இதையடுத்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் லட்சுமியின் தாய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான லட்சுமியை தேடி வருகிறார்கள்.
இன்று நிச்சயதார்த்தம் நடைபெறும் நிலையில் இளம்பெண் மாயமான சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






