என் மலர்
நீங்கள் தேடியது "Individual candidates"
- தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
- தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் தனித்தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
உடுமலை:
நடப்பாண்டு ஜூன் மாதம் தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு அரசு தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தோடு ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்த மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்து அந்தந்த மாவட்டத்தின் அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சென்று சமர்பிக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலேயே கம்ப்யூட்டர் புகைப்பட கருவி வாயிலாக புகைப்படம் எடுத்து அங்கேயே தேர்வு கட்டணத்தையும் செலுத்தி, விண்ணப்பத்தையும் ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.ஒவ்வொரு பாடத்துக்கும் 50 ரூபாய், மதிப்பெண் சான்றிதழ், முதல் மற்றும் இரண்டாமாண்டுக்கு தலா 100 ரூபாய், பதிவு மற்றும் சேவை கட்டணம் 15 ரூபாய், ஒரு விண்ணப்பத்துக்கு ஆன்லைன் கட்டணமாக 50 ரூபாயும் செலுத்த வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 9-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை சமர்பிக்கலாம்.
மே 9 முதல் 13-ந்தேதி வரை விண்ணப்பிக்க தவறும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் இம்மாதம் 15, 16ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதி விண்ணப்பகட்டணமாக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.தபால் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள், மற்றும் தகுதியற்ற விண்ணப்பங்கள் முன்அறிவிப்பின்றி நிராகரிக்கப்படும்.தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் தனித்தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனித்தேர்வர்கள் திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.இத்தகவலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர் தெரிவித்தார்.






