search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian officer kulbhushan hadhav"

    அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 முதல் 21ம் தேதி வரை குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணை நடைபெறும் என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. #KulbhushanJadhav #ICJ
    இஸ்லாமாபாத்:

    இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ், இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கைது செய்யப்பட்டார்.

    அவர் மீதான வழக்கை அவசரமாக விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. ஜாதவ், கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஈரானில் தனது சொந்த வியாபார நிமித்தமாக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்பது இந்தியாவின் வாதமாக உள்ளது.
     


    இதற்கிடையே, ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்ததை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் தி ஹேக் நகரில் செயல்பட்டு வருகிற சர்வதேச கோர்ட்டை இந்தியா நாடியது. அதைத் தொடர்ந்து அவரை தூக்கில் போட சர்வதேச கோர்ட்டு தடை விதித்தது. இதனையடுத்து குல்பூஷனின் மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இந்த வழக்கு 10 நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 முதல் 21ம் தேதி வரை குல்பூஷன் ஜாதவ் வழக்கு விசாரணை நடைபெறும் என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் சிறையில் இருந்து வரும் குல்பூஷன் வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சர்வதேச நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது என தெரிவித்துள்ளனர். #KulbhushanJadhav #ICJ
    ×