என் மலர்

  நீங்கள் தேடியது "India Open boxing tournament"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய ஓப்பன் குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
  கவுகாத்தி:

  2-வது இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. நேற்று நடந்த இறுதிப் போட்டிக்கான பந்தயங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதில் இந்தியா மொத்தம் 12 தங்கப்பதக்கங்களை அள்ளியது.

  6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றில் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை வன்லால் டுடியை எளிதில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனது வசமாக்கினார்.  மற்றொரு இந்திய வீராங்கனை சரிதா தேவி (60 கிலோ) 3-2 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை சிம்ரன்ஜித் கவுரை வீழ்த்தி தங்கம் வென்றார். கடந்த 3 ஆண்டுகளில் சரிதா தேவி வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

  இதேபோல், ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 4-1 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் சச்சின் சிவாச்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மேலும், 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீரர் மனிஷ் கவுசிக்கை வென்று தங்கம் வென்றார்.
  ×