search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India New Zealand Cricket Series"

    நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19 மற்றும் 21-ந் தேதியில் நடக்கிறது.

    முதல் டெஸ்ட் வருகிற 25-ந் தேதியும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3-ந் தேதியும் தொடங்குகிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும். தற்போது உள்ள வீரர்களில் ராகுல், இஷான் கி‌ஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த உலக கோப்பையில் ஆட வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

    எனவே நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். உள்ளூரில் விளையாடுவதால் வீரர்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் அணியை தயார் செய்ய வேண்டும்.

    சில வீரர்கள் 6 மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு இருக்கிறார்கள். இதனால் சில சமயம் ஓய்வு தேவைப்படுகிறது. எனவே சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு ஷேவாக் கூறியுள்ளார்.

    நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் போல்ட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் போட்டி தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. வேகப்பந்து வீச்சாளர் போல்ட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இருந்து விலகி உள்ளார்.

    இந்திய சுற்றுப்பயணத்துக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:-

    நியூசிலாந்து டெஸ்ட் அணி:-

    கனே வில்லியம்சன் (கேப்டன்), ஹென்றி நிக்கோலஸ், ரோஸ் டெய்லர், டாம் ப்ளன்டெல், டெவோன் கன்வே, ஜேமிசன், அஜஸ் பட்டேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், வில் சோமர் வில்லே, டிம் சவுத்தி, வில்யங், நீல்வாக்னர், டாம் லாதம்.

    நியூசிலாந்து டி20 அணி:-

    கனே வில்லியம்சன் (கேப்டன்), டோட் ஆஸ்டில், ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மார்ட்டின் கப்டில், கைல் ஜேமிசன், ஆடம் மில்னே, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சீஃபர்ட், இஷ் சோதி மற்றும் டிம் சவுதி


    ×