என் மலர்
நீங்கள் தேடியது "India and West Indies"
புனே:
இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது போட்டி சமன் நிலையில் (டை) முடிந்தது.
இரு அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி நாளை புனேவில் நடக்கிறது. இந்திய அணி பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறது. கோலி, ரோகித் சர்மா, அம்பதி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முதல் இரண்டு போட்டியிலும் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து உள்ளார். அவர் ஹாட்ரிக் சதம் அடிப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
பந்து வீச்சில் இந்திய அணி முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாக உள்ளது. இதையடுத்து கடைசி மூன்று ஒரு நாள் போட்டிக்கான அணியில் வேகப் பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முகமது ஷமி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் நாளைய போட்டியில் புவனேஸ்வர் குமார், பும்ரா களம் இறங்குவார்கள்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளதால் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஹெட்மையர், ஷாய் ஹோப் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹோல்டர், கேமர் ரோச், நர்ஸ் ஆகியோர் உள்ளனர்.
அந்த அணி 2-வது போட்டியில் வெற்றியை நெருங்கி வந்து ‘டை’ செய்தது. 3-வது போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. இப்போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி விவரம் வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, ரிஷப் பந்த், டோனி, லோகேஷ் ராகுல், ஜடேஜா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ், மணிஷ் பாண்டே. #INDvWI #odi #viratkohli






