search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDAvAUSA"

    ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது இந்தியா ‘ஏ’. #INDAvAUSA
    இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டம் கடந்த 8-ந்தேதி ஆலுரில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ மிட்செல் மார்ஷின் (113) சதத்தால் முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரவிக்குமார் சமர்த் (83), அபிமன்யு ஈஸ்வரன் (86) சிறப்பான அடித்தளம் அமைத்தனர். அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களும், ஷுப்மான் கில் 50 ரன்களும் அடித்தனர். 6-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் (106) சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 52 ரன்கள் அடிக்க இந்தியா ‘ஏ’ 144 ஓவர்கள் விளையாடி 505 ரன்கள் குவித்தது.

    பின்னர் 159 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 121 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.



    டிராவிஸ் ஹெட் 4 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டிராவிஸ் ஹெட் 47 ரன்னிலும், ஹேண்ட்ஸ்காம்ப் 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் மிட்செல் மார்ஷை (36) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா ‘ஏ’ 213 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்தியா ‘ஏ’ அணியை விடை ஆஸ்திரேலியா ‘ஏ’ 54 ரன்கள் மட்டுமே அதிகம் பெற்றிருந்ததால், 55 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்தியா ‘ஏ’ 6.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா ‘ஏ’ சமன் செய்தது.
    விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் சதமடிக்க இந்தியா ‘ஏ’ ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக முதல் இன்னிங்சில் 505 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. #INDAvAUSA
    இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தற்போது 2-வது ஆட்டம் ஆலுரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ‘ஏ’ மிட்செல் மார்ஷின் (113) சதத்தால் முதல் இன்னிங்சில் 346 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரவிக்குமார் சமர்த் (83), அபிமன்யு ஈஸ்வரன் (86) சிறப்பான அடித்தளம் அமைத்தனர். அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 42 ரன்களும், ஷுப்மான் கில் 50 ரன்களும் அடித்தனர்.

    6-வது வீரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் (106) சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 52 ரன்கள் அடிக்க இந்தியா ‘ஏ’ 144 ஓவர்கள் விளையாடி 505 ரன்கள் குவித்தது.



    159 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் அடித்துள்ளது. இன்னும் 121 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணி உள்ளது.

    நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் விக்கெட்டை விரைவில் வீழ்த்தினால் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது.
    நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணியை 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா ‘ஏ’. #INDAvAUSA
    இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் உஸ்மான் கவாஜா (127) சதத்தால் 243 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தயா ‘ஏ’ அங்கித் பவன் (91) ஆட்டத்தில் 274 ரன்கள் சேர்த்தது. 31 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா ‘ஏ’ 2-வது இன்னிங்சை தொடங்கியது. டிராவிஸ் ஹெட் (87) ஆட்டத்தால் 292 ரன்கள் குவித்தது.

    இதனால் இந்தியாவிற்கு 262 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 80 ரன்கள் சேர்த்தார். ஆனால் நான்கு பேர் டக்அவுட் ஆக இந்தியா ஏ 163 ரன்னில் சுருண்டது. இதனால் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
    நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிராக முகமது சிராஜ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முத்திரை பதித்தார். #INDA #MohammedSiraj
    இந்தியா - ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி கவாஜா, குர்ட்டிஸ் பேட்டர்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பேட்டர்சன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதன்பின் வந்த டிராவிஸ் ஹெட் (4), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் (0), மிட்செல் மார்ஷ் (0) ஆகியோரை அடுத்தடுத்து சிராஜ் வீழ்த்தினார்.

    அதன்பின் கவாஜா உடன் மார்னஸ் லபுஸ்சேக்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மார்னஸ் லபுஸ்சேக்னே அரைசதமும், உஸ்மான் கவாஜா சதமும் அடித்தனர்.


    சதம் அடித்த கவாஜா

    அதன்பின் இருவரையும் சிராஜ் வீழ்த்தினார். மார்னஸ் லபுஸ்சேக்னே 60 ரன்களும், கவாஜா 127 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் கடைநிலை வீரர்களை சிராஜ் வெளியேற்ற ஆஸ்திரேலியா ‘ஏ’ 75.3 ஓவரில் 243 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 8 விக்கெட் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் இந்தியா ‘ஏ’ முதல் இன்னிங்சை தொடங்கியது. ரவிக்குமார் சமர்த், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்தியா ‘ஏ’ அணி 12 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ரவிக்குமார் சமர்த் 10 ரன்னுடனும், மயாங்க் அகர்வால் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    ×